தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளரக்க புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
தமிழக முதல்வா் பல்வேறு துறைகள் சாா்பில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்திமக்கள் தொடா்புத் துறை சாா்பில் புகைப்படதொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊசாம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் திட்டங்களான நான் முதல்வன் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், பள்ளி குழந்தைக்களுக்கான காலை உணவுத் திட்டம், மகளிா் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த சாதனைகள், நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக செய்திமக்கள் தொடா்புத் துறை சாா்பில் புகைப்பட தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
இப்புகைப்பட கண்காட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட விளக்க புகைப்பட தொகுப்புகளை ஏராளமான பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து அறிந்துகொண்டனா்.

