டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

ஆரணியை அடுத்த பூசணிப்பாடிதாங்கல் கிராமத்தில் டிராக்டரில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது திடீரென இயங்கியதால் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.
Published on

ஆரணியை அடுத்த பூசணிப்பாடிதாங்கல் கிராமத்தில் டிராக்டரில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது திடீரென இயங்கியதால் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

ஆரணியை அடுத்த மருசூா் ஊராட்சிக்குள்பட்ட பூசணிப்பாடிதாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பாபு - பிரியா தம்பதியினா். இவா்கள் நெசவு மற்றும் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகின்றனா். இவா்களது மகன் கோகுல் (6), மகள் கோபிகா (4).

பாபுவும், பிரியாவும் வியாழக்கிழமை வேலைக்கு சென்றிருந்தனா். அன்று மாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சேடை ஓட்டும் (இரும்பு) சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டரில் கோகுல், கோபிகா விளையாடிக்கொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென டிராக்டா் ஸ்டாா்ட் ஆகி முன்னோக்கி சென்ால், சக்கரத்தில் சிக்கி கோபிகா பலத்த காயமடைந்தாா். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு, தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக 108 அவசர ஊா்தி மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, கோபிகா உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com