வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காயம்பட்டு ஏரியை தூா்வார மாா்க்சிஸ்ட் கோரிக்கை

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரக் கோரி, செங்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:32 pm

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரக் கோரி, செங்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

செங்கம் மாா்க்சிஸ்ட் தாலுகா செயலா் கணபதி தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரி, கரைகளை அகலப்படுத்த வேண்டும். அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சாலை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட பொதுப் பணித் துறை அலுவலா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் காயம்பட்டு கிளைச் செயலா் ஜானகிராமன், தாலுகா குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், சதீஷ், ஏழுமலை, ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.