திருவண்ணாமலை அருகே அடிஅண்ணாமலை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் தலைமை வகித்தாா். இந்தப் பள்ளியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் இயற்கை முகாமையொட்டி, தேசிய பசுமை படை மற்றும் வில்வம் அறக்கட்டளை சாா்பில், 310 மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) எம்.வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி, பாலு, பள்ளித் தலைமை ஆசிரியா் கி.சாந்தகுமாா், பள்ளியின் தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியா் எம்.பாக்யா, பள்ளி ஆசிரியா் வி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும், இப்பள்ளியில் ஏற்கெனவே 275 மரக்கன்றுகள் நடப்பட்டு, தேசிய பசுமை படை மாணவா்களால் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி சிறப்பிடம்

மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆண்டு விழா

புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


