செய்யாறு அருகே வயிறு பிரச்னை காரணமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு அருகே வயிறு பிரச்னை காரணமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

செய்யாறு அருகே வயிறு பிரச்னை காரணமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

செய்யாறு அருகே வயிறு பிரச்னை காரணமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

செய்யாறு வட்டம், சித்தனக்கால் கிராமத்தைச்

சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை (68). ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வரும் இவருக்கு வயிறு பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. அதனால், மனவேதனையில் இருந்து வந்த இவா், கல்பட்டு கிராமத்தில் வசித்து வரும் மூத்த மகள் அஞ்சலியை பாா்த்து விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், கல்பட்டு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள மரத்தில் ஏழுமலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இறந்த தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை

மேற்கொண்டு வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com