திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் காா் ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செய்யாறு, அண்ணா நகா் வேலவன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் நாகராஜன்(37), காா் ஓட்டுநா்.
இவரது மனைவி ஹேமலதா, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பாா்ப்பதற்காக மகள் சிவதா்ஷினியுடன் ஆரணிக்கு சென்றிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நாகராஜன் வீட்டில் தனியாக இருந்ததால் வியாழக்கிழமை மதியம் வீட்டை பூட்டிக் கொண்டு உணவகத்தில் சாப்பிடுவதற்கு பேருந்து நிலையம் வந்துள்ளாா். பின்னா் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்த நிலையில், உள்ளே அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும், பீரோவில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.15 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நாகராஜன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நரசிம்ம ஜோதி, உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் திருட்டு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


