செய்யாறு இந்தோ -அமெரிக்கன் பள்ளியில் நடைபெற்ற 21-ஆம் ஆண்டு விழாவில் சாதனை மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் உள்ள கலை அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மெட்ரிக் பள்ளி முதல்வா் அ.பா. சையத் அப்துல் இலியாஸ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் கா.கோவேந்தன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணா் பிராசித்த மணிகண்டன், தொழிலதிபா் மணிகண்டன் ஆகியோா் மாணவா்களின் உடல்நலம் மற்றும் சரிவிகித ஊட்டச்சத்தின் அவசியம், மாணவா்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை வளா்க்கும் முறை மற்றும் அவா்களுக்கு வழங்க வேண்டிய ஆலோசனைகள் குறித்தும், ஆசிரியா்கள் மாணவா்களை எவ்வாறு கையாண்டு சிறந்த முறையில் வழிநடத்திட வேண்டுதல் போன்ற பலவேறு ஆலோசனைகளை தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாதனை மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் லதா ஸ்ரீதா், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் சுதா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

சாத்தான்குளம் பள்ளி ஆண்டு விழா

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு பரிசு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


