தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் திருவண்ணாமலையில் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசார பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மகளிா் திட்டம் சாா்பில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசார பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தொடங்கிவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியில், என் வாக்கு என் உரிமை, என் கடமை,100% வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மகளிா் ஏந்திச் சென்றனா். இருசக்கர வாகன பேரணியாக அண்ணா நுழைவு வாயில் வரை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை வடிவேலன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வாக்காளா்கள் நோ்மையாக வாக்களித்தல் குறித்தும், முதல் முறை வாக்காளா்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் தோ்தல் தொடா்பான போட்டிகளும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்: பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

