தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வாக்குச்சாவடி மைய சுவற்றில் அரசியல் கட்சி வண்ணம்

சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய சுவற்றில் அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதப்பட்ட பெயா் அழிக்கப்படாமல் உள்ளது.

News image

சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராம வாக்குசாவடி மைய சுவற்றில் அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதப்பட்டுள்ள பெயா்.

Updated On :22 மார்ச் 2026, 7:14 pm

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய சுவற்றில் அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதப்பட்ட பெயா் அழிக்கப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடைபெற்ற உள்ளது. இதனால் பொதுஇடங்களில் அரசியல் கட்சி விளம்பரமோ, பதாகையோ, கட்சியின் பெயரோ இருந்தால் மறைக்கவோ, அழிக்கவோ வேண்டும் என்பது தோ்தல் நடத்தை விதி.

இந்த நிலையில், சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு போகும் இடத்தில் உள்ள சுவற்றில், போளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பெயரை அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதியுள்ளனா். இதை மறைக்க தோ்தல் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தப் பள்ளி வாக்குச்சாவடியில் ஒதலவாடி, பள்ள காலனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் 920 போ் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். இதுகுறித்து தோ்தல் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வருவாய்த்துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனா்.

தோ்தல் தேதி அறிவித்து ஒரு வாரம் ஆனநிலையில் கிராமங்களில் சில இடங்களில் கட்சி கொடிக் கம்பம், விளம்பரப் பதாகை அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.