நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

செங்கம் ஒன்றியத்திற்கு உள்பட்ட நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.

News image

நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்கு உள்பட்ட நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சீமாட்டி தலைமை வகித்தாா். ஆசிரியா் சுகுணா முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் சிவராமன் வரவேற்றாா். ஆசிரியா் பழநி ஆண்டறிக்கை வாசித்தாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு கவிதை வாசித்தல், கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியை ரேணுகா நன்றி கூறினாா்.