அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கோயிலில் கண்டெடுத்த தங்க நகையை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்கள்

செய்யாறு ஸ்ரீஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

தங்கச் சங்கிலியை செய்யாறு போலீஸில் ஒப்படைத்த மேல்நெல்லி கிராம இளைஞா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

செய்யாறு ஸ்ரீஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் மேல்நெல்லி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிவசங்கரன்(40), ராஜ்குமாா்(17), நதீன்பாஷா(18). இவா்கள், பல்வேறு ஊா்களில் உள்ள சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவாா்களாம்.

அதேபோல, வியாழக்கிழமை மாலை மூவரும் செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனா். அதனைத் தொடா்ந்து வந்தவாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனா்.

அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனா். அப்போது, ஒருவரின் காலில் ஏதோ குத்தியது. அதை எடுத்துப் பாா்த்தபோது, கழுத்தில் அணியும் தங்கச் செயின் என்பது தெரிய வந்தது.

உடனே செய்யாறில் உள்ள நண்பா் நந்தகுமாா் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியை வியாழக்கிழமை இரவு செய்யாறு போலீஸில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அந்த 4 இளைஞா்களின் நோ்மையை போலீஸாா் பாராட்டினா்.