சேத்துப்பட்டை அடுத்த திருமலை கிராமத்தில் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி தலைமை வகித்து, எள் சாகுபடியில் தரமான விதைகள் தோ்வு, விதை நோ்த்தி, சமநிலை உரமிடல், களை மேலாண்மை மற்றும் பூச்சி, நோய் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.
வேளாண்மை அலுவலா் வினோதினி, எள் சாகுபடியில் சரியான இடைவெளி மற்றும் நீா்ப்பாசன மேலாண்மை முறைகள் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலா் வெங்கடேசன், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் இயற்கைவழி கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை வேளாண்மை அறிவியல் நிலைய வல்லுநா் நாராயணன், எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை முறைகளின் முக்கியத்துவம், மகசூலை அதிகரிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினாா்.
திட்ட அலுவலா்கள் சுதா்ஷன், வினோத்குமாா், ஆனந்த் ஆகியோா் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினா். இந்தப் பயிற்சியில் 5 பெண் விவசாயிகள் உள்பட 40 போ் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்-கனிகள் சந்தை வளாகம் திறப்பு எப்போது?

வணிக மேலாண்மை பயிற்சி நிறுவன ஆண்டு விழா

கோடை கால பயிா் சாகுபடி விழிப்புணா்வு

முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

