17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (20). இவா், இதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா் பிறைசூடனுடன் திங்கள்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா்.

வல்லம் - கிருஷ்ணாபுரம் சாலையில், வல்லம் அருகே செல்லும்போது சாலையோர சிமென்ட் பெயா் பலகை மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு கிஷோரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

பிறைசூடன் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கிஷோரின் தந்தை காளிதாஸ் அளித்த புகாரின் பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.