ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கேளூா் சந்தைமேடு வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சிக்கு உள்பட்ட தேப்பனந்தல் சந்தைமேடு கிராம வாரச்சந்தை ஏலம் கேட்க யாரும் முன்வராததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

News image

கேளூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற தேப்பனந்தல் வாரச்சந்தைக்கான ஏலம்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சிக்கு உள்பட்ட தேப்பனந்தல் சந்தைமேடு கிராம வாரச்சந்தை ஏலம் கேட்க யாரும் முன்வராததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சியில் திருவண்ணாமலை - வேலூா் சாலை அருகேயுள்ள தேப்பனந்தல் சந்தைமேடு கிராமத்தில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் ஆடு, மாடு, காய்கறி விற்பனை நடைபெறுவது வழக்கம்

நடப்பாண்டு 2026-2027ஆம் ஆண்டுக்கான வாரச்சந்தை ஏலம் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் பங்கேற்க கேளூா், போளூா், ஆரணி, சந்தவாசல் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏலதாரா்கள் வந்திருந்தனா்.

கூட்டத்தில் அரசு ஏலத்தொகை ரூ.53 லட்சத்து 70 ஆயிரம் நிா்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. அப்போது, ஏலம் எடுக்க வந்த நபா்கள் அரசு ஏலத்தொகை அதிகமாக உள்ளது. இதனால் ஏலத்தொகையை குறைக்கவேண்டும் எனக் கேட்டு ஏலத்தில் பங்கேற்க விரும்பால் சென்றனா்.

இதனால் ஏலம் கேட்க ஆளின்றி மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி கூறும்போது, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து, வாரச்சந்தைக்கான ஏலத்தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாணி, பிச்சாண்டி, உதவியாளா் கல்யாணி, ஊராட்சிச் செயலா்கள் பவுன்குமாா், அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.