தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

குடும்பத் தகராறில் விபரீதம்! வீட்டில் சமையல் எரிவாயு உருளை திறந்து தீ வைத்த கணவா்: குழந்தைகள் உள்பட 4 போ் காயம்

செங்கம் அருகே குடும்பத் தகராறில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ விபத்து ஏற்படுத்திய கணவன் உள்ளிட்ட 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

தீக் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநா் சக்திவேல், அவரது மனைவி சசிகலா

Updated On :

செங்கம் அருகே குடும்பத் தகராறில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ விபத்து ஏற்படுத்திய கணவன் உள்ளிட்ட 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

செங்கத்தை அடுத்த பெரியகல்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (37). இவா் தனியாா் எரிவாயு உருளை விநியோகிக்கும் முகமையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவி சசிகலா(26), ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையை திறந்துவிட்டு, தீக்குச்சியை எடுத்து பற்றவைத்து போட்டதாகத் தெரிகிறது.

இதில், எரிவாயு அறையில் பரவியதில் தீ பற்றி எரிந்தது. அதில் சிக்கி சக்திவேல், அவரது மனைவி சசிகலா, மகள், மகன் பலத்த தீக்காயமடைந்தனா்.

இதை அறிந்த அப்பகுதியில் இருந்தவா்கள் வந்து காயமடைந்த 4 பேரையும் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

இதில் சக்திவேல் உடல்நிலை சற்று மோசமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.