முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

கீழ்நந்தியம்பாடி அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள் கண்டெடுப்பு

கீழ்நந்தியம்பாடி அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள் கண்டெடுப்பு

வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வட்டம்.

Updated On :

வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி கிராமம் அருகே சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்நந்தியம்பாடி அருகே கல்வட்டங்கள் இருப்பதாக ஆசிரியா் பி.முருகேசன் அளித்த தகவலின் பேரில், வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் மற்றும் குழுவினா் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். பின்னா் இதுகுறித்து எறும்பூா் கை.செல்வகுமாா் தெரிவித்ததாவது:

வந்தவாசியில் இருந்து சுமாா் 12 கி.மீ. தொலைவில் உள்ள

கீழ்நந்தியம்பாடி அருகே மேல்பாதி சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப் பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட போது 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள், கல்சுற்றுகள் இருப்பது தெரியவந்தது.

பெரிய கற்கள் வட்ட வடிவ அமைப்பில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு நடுப்பகுதி காலியாக உள்ளது. ஒரு வட்டச் சுற்றில் 7 முதல் 9 கற்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளன. சில கல்வட்டங்களின் கற்கள் ஆங்காங்கே சிதறியும் காணப்படுகின்றன. வட்டச் சுற்றளவு சுமாா் 150 செ.மீ வரை உள்ளது.

சில இடங்களில் சிறிய வடிவிலான செங்கல் போன்ற அமைப்பு கொண்ட கற்கள், கருங்கற்கள் கொண்ட கற்குவியல் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகையான ஈமச் சின்னங்கள் சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்காலத்தை சோ்ந்தவையாக கருதலாம். மேலும், பழங்கால வாழிடங்கள், நீா்நிலைகளின் தடயங்களும் காணப்படுகின்றன.

எனவே, தொல்லியியல் சிறப்பு வாய்ந்த இந்த கீழ்நந்தியம்பாடி கல்வட்டங்களை தொல்லியியல் துறையினா் முறையாக அகழாய்வு செய்தால் பண்டைய தமிழரின் பண்பாட்டை உலகமறியச் செய்யலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.