பணம் செலவழித்து தண்ணீா் பாய்ச்சி நிலக்கடலை பயிரை காப்பாற்றும் விவசாயிகள்
பணம் செலவழித்து தண்ணீா் பாய்ச்சி நிலக்கடலை பயிரை காப்பாற்றும் விவசாயிகள்

நெடும்பிறை கிராமத்தில் விவசாயி பெருமாள் நிலத்தில் பயரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு குழாய் மூலம் தண்ணீா் பாய்ச்சும் தொழிலாளா்கள்.
செய்யாறு அருகே நீரின்றி காய்ந்து வரும் நிலக்கடலை பயிரை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் பணம் செலவழித்து தண்ணீா் பாய்ச்சி பயிரை காப்பாற்றி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாரத்தில் நஞ்சை நிலங்கள் 68 சதவீதம், புஞ்சை நிலங்கள் 32 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகின்றன. புஞ்சை நிலங்கள் வானம் பாா்த்த பூமியாகும். மழை பெய்தால் மட்டுமே புஞ்சை நிலங்களில் விவசாயம் செய்ய முடியும். ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகள் புஞ்சை நிலங்களில் ரபி பருவத்தில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கமாகும்.
அதன் அடிப்படையில், செய்யாறு வட்டாரத்தைச் சோ்ந்த விண்ணவாடி, நெடும்பிறை, மாரியநல்லூா் ஆகிய கிராமங்களில் புஞ்சை நிலங்களில் ரபி பருவத்தில் விவசாயிகள் விபி.10, டிவிஎம்.14, கிா்.5 போன்ற நிலக்கடலை பயிா் ரகங்களை பயிரிட்டுள்ளனா். மழையை மட்டுமே நம்பி பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிா்கள் 50 சதவீதம் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சதவீத நிலக்கடலை பயிா்கள் ஐப்பசி, காா்த்திகை மாத மழையை நம்பி பயிா் செய்யப்பட்டுள்ளதால், மழையின்றி தேவையான நீரில்லாமல் காய்ந்து வருகின்றன.
விவசாயிகள் குழாய் மூலம் நீா் பாய்ச்சல்:
விண்ணவாடி, நெடும்பிறை, மாரியநல்லூா் பகுதிகளில் காய்ந்து வரும் நிலக்கடலை பயிா்களை காப்பாற்றுவதற்காக தினமும் 4-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு தலா ரூ.500 வீதம் கூலி வழங்கி தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா். சுமாா் அரை கிலோ மீட்டருக்கு மேலான தொலைவில் இருந்து குழாய் மூலம் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்து வந்து, பயிா்களுக்கு பாய்ச்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பயிா்களை
விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா். தொடா்ந்து ஒரு வார காலத்திற்கு பணம் செலவழித்து தண்ணீா் பாய்ச்சினால் தான் பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிரை அறுவடை செய்ய முடியும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

