மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் காடா துணிக்கு சிறப்புப் பூஜை
மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் காடா துணிக்கு சிறப்புப் பூஜை

திருவண்ணாமலை மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடா துணியை கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்ய எடுத்துச் சென்ற பக்தா்கள்.
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1,000 மீட்டா் காடா துணிக்கு கோயில் மூன்றாம் பிராகாரத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அருணாசலேஸ்வா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதன் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (நவ.24) அதிகாலை 4 மணிக்கு கோயிலில் மூலவா் கருவறை சந்நிதியில் பரணி தீபமும், அதனைத் தொடா்ந்து மாலையில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரைக்கு கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, ஊழியா்கள் மூலம் திங்கள்கிழமை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதேபோல, மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1,000 மீட்டா் காடா துணி மாடவீதியில் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகா் சந்நிதி முன் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் மகா தீபத்திற்காக காடா துணி தீபமலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

