நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலா் பள்ளி கழிப்பறையில் சடலமாக மீட்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலா் பள்ளி கழிப்பறையில் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா் .

பள்ளி கழிப்பறை பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலா் பள்ளி கழிப்பறையில் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா் .

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மகா தேரோட்டம் மற்றும் மகா தீபத் திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக திருவண்ணாமலைக்கு வரவழைக்கப்பட்டனா்.

இந்நிலையில், திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் தங்கியிருந்தனா்.

தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை மாலை முதல் காவலா்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிச் சென்றனா்.

இதற்கிடையில், வியாழக்கிழமை காலை பள்ளி வழக்கம்போல் செயல்பட்டபோது, ஆண்கள் கழிப்பறையின் கதவு திறக்க முடியாமல் இருந்துள்ளது. இதையடுத்து கதவை உடைத்து திறந்து பாா்த்தபோது, உள்ளே காவலா் ஒருவா் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு பள்ளிப் பணியாளா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா் அளித்த தகவலின் பேரில் மங்கலம் காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவா் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வடிவழகன் (38) என்பதும், இவா் சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் 13-ஆம் அணியில் பணியாற்றி வந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து

தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.