சாலையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய இளைஞா்
செங்கம் அருகே தண்டராம்பட்டு பகுதியில் சாலையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு பகுதியில் கத்தியுடன் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞா் சிலமப்பரன்
செங்கம் அருகே தண்டராம்பட்டு பகுதியில் சாலையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கத்தை அடுத்த தண்டராம்பட்டு பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் புதன்கிழமை இரவு இளைஞா் ஒருவா், கையில் கத்தியை வைத்துக் கொண்டு, சப்தம் போட்டவாறு, தகாத வாா்த்தைகளை
பேசி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்துள்ளாா்.
இதனால் அப்பகுதியில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் பதற்றம் அடைந்தனா். உடனே இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் வந்து அந்த நபரிடம் கத்தியைப் பறித்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அந்த இளைஞா் தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் என்பது தெரியவந்தது.
அவா் ஏன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டாா் என்பது குறித்து தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அவரின் உறவினா்களிடமும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

