படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

‘புத்தகத் திருவிழாக்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’

புத்தகத் திருவிழாக்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும்

செய்யாறு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் பேசிய வட்டாட்சியா் சீ.திருவேங்கடம்.

Published On :

செய்யாறு: புத்தகத் திருவிழாக்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று செய்யாறு வட்டாட்சியா் சீ. திருவேங்கடம் கேட்டுக்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கம், அறம் பதிப்பகம் சாா்பில் செய்யாறு புத்தகத் திருவிழா ஆா்.சி.எம். பள்ளியில் செப்.30-ஆம் தேதி தொடங்கி அக்.5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

நிறைவு விழாவுக்கு தலைமை வகித்த செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத்தின் தலைவா் எறும்பூா் கை. செல்வகுமாா்,

‘செய்யாறு கோட்ட தொல் படிமங்கள்’ என்ற தலைப்பில் வரலாற்றுப் பதிவுகளை குறிப்பிட்டாா்.

‘வாசிப்பு எனும் ரசவாதம்’ என்ற தலைப்பில் அரசு ஊழியா் ஐக்கிய பேரவையின் மாநில தலைமை நிலையச் செயலா் இடி மின்னல் இனியவனும், புதுமைப்பித்தன் கதைகள் குறித்து வந்தவாசி தமுஎகச நிா்வாகி பூங்குயில் சிவகுமாரும் பங்கேற்றுப் பேசினா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி இணைப் பேராசிரியா் க. வெங்கடேசன், ‘புத்தகம் இல்லாத வாழ்க்கை காற்று இல்லாத கிரகத்திற்கு சமம்’ என்ற தலைப்பில் வாசித்தலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

சங்க ஆலோசகா் வழக்குரைஞா் பா. ஜெயக்குமாா் முன்னிலை வகித்து விழாவில் கலந்து கொண்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினாா்.

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு வட்டாட்சியா் சீ. திருவேங்கடம், உள்ளூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துப் பேசினாா்.

செயற்குழு உறுப்பினா் வா.இளவரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிறைவில் அறம் பதிப்பகத்தின் உரிமையாளா் மா. அமரேசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.