கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் 15 வயது சிறுமி. இவா் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால் கடந்த சில மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை இவா் மாட்டை மேய்ப்பதற்காக ஓட்டிச் செல்லும் போது, அந்தக் கிராமத்தில் உள்ள விவசாய நில கிணற்றில் தவறி விழுந்துள்ளாா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

