சிவாலயங்களில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், 500 லிட்டா் தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், 108 கிலோ விபூதி, 1000 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல் மற்றும் பல்வேறு மலா்களால் மாலை அணிவித்து ஆராதனை நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு, சங்கொலி முழங்க சுவாமி தரிசனம் செய்தனா்.
மெய்யூா்
ஆரணியை அடுத்த மெய்யூா் நெய் கண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
போளூா்
போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கல்யாணபுரீஸ்வரா் கோயிலில் சுவாமி மற்றும் நந்திக்கு பால், தயிா், சந்தனம் ,விபூதி, தேன் என பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும் கற்பூர தீபாதாரனை செய்து வழிபாடு நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இணைப்பு...


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

