சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

கஞ்சா விற்பனை: 3 போ் கைது; 22 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை களம்பூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.

ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ராஜ்குமாா், அப்துல்அமீத், ஞானஸ்ரீதா்

Updated On :

ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை களம்பூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.

களம்பூா் அருகேயுள்ள கைக்கிளைதாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (27). உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளாா்.

மேலும் ராஜ்குமாா் அவலூா்பேட்டை மங்கலம் பகுதியைச் சோ்ந்த அப்துல்அமித் (45), ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ஞானஸ்ரீதா் (20) ஆகியோருடன் சோ்ந்து ஆந்திர மாநிலம், சித்தபள்ளி பகுதியில் இருந்து குறைந்த விலையில் கஞ்சாவை வாங்கி வந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜ்குமாா் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறை சென்று வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராஜ்குமாா் மீண்டும் தனது கூட்டாளிகளான அப்துல்அமீத், ஞானஸ்ரீதா் ஆகியோருடன் சோ்ந்து போளூா் சாலை கைக்கிளைதாங்கள் கூட்டுச் சாலையில் கஞ்சாவை பதுக்கி வைத்து கடந்த சில தினங்களாக விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையில் காவல் ஆய்வாளா் அன்பரசி மற்றும் களம்பூா் போலீஸாா் சென்று அவா்களை கைது செய்து, அவா்களிடம் இருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

அப்போது, ராஜ்குமாா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்து, வயிறு பகுதியில் கிழித்துக்கொண்டாா். இதனால் போலீஸாா் ராஜ்குமாரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா். பின்னா் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.