நுகர்வோர் பாதுகாப்பு தினத்தையொட்டி, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கவிதை, கட்டுரைப் போட்டிகளை இம்மாதம் 25ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயஷீலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பது:
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா இம்மாதம் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
விழாவில் அனைத்து நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளலாம். மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.
நுகர்வோர் நலன் காப்போம் என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான அவசியம் மற்றும் ஆலோசனைகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது.
மாணவர்களின் படைப்புகள், கவிதை 20 வரிகளுக்கு மிகாமலும், கட்டுரை இரண்டு பக்க அளவிலும், ஓவியம் சார்ட்டில் கால் பக்க அளவிலும் இருக்க வேண்டும்.
படைப்புகளை பள்ளி, கல்லூரி முதல்வர்களின் சான்றொப்பம் பெற்று இம் மாதம் 25ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ, தபாலிலோ அனுப்பலாம்.
முகவரி: மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, வேலூர்- 632009 என்றார் ஜெயஷீலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.