5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

ஜப்தி செய்வதாக வந்த தகவலால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

அரசு வாகனங்களை ஜப்தி செய்யப் போவதாகத் தகவல் பரவியதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நின்ற அரசு வாகனங்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டன.

Updated On :

அரசு வாகனங்களை ஜப்தி செய்யப் போவதாகத் தகவல் பரவியதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நின்ற அரசு வாகனங்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டன.

ஆதிதிராவிடர் நலத்துரை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் அருகே சிலரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு குறைந்த இழப்பீடு வழங்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பின்பற்றி தொடர்புடைய துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்காத நிலையில், கடந்த மாதம் ஆட்சியர் அலுவலகத்தில் நின்ற செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர் துணையுடன் வழக்குரைஞர் முயற்சி மேற்கொண்டார். அதையடுத்து ஆதிதிராவிடர் நலத் துறையில் காலஅவகாசம் கோரியதை அடுத்து ஜப்தி கைவிடப்பட்டது.

இதேபோல், வேறொரு வழக்கில் இழப்பீடு வழங்காததை அடுத்து அரசு வாகனங்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர், வாதியின் வழக்குரைஞர் வருவதாக திங்கள்கிழமை காலை தகவல் பரவியது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியர் கார் உள்பட அதிகாரிகளின் வாகனங்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.