ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள்: வி.கே.ஆர்.சீனிவாசன்

Eற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் தனது தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து கூறியதாவது:

வி.கே.ஆர்.சீனிவாசன் (அதிமுக)

சட்டப்பேரவை உறுப்பினர், ஆற்காடு.

ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் தனது தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து கூறியதாவது:

ஆற்காடு தொகுதியில் ரூ. 293 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, குடிநீர், கழிவுநீர்க் கால்வாய், பூங்காக்கள் மேம்படுத்துதல், புதிய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆற்காடு தொகுதியில் உள்ள ஆற்காடு நகராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில், தமிழகத்திலேயே முதல்முறையாக காய்கனிக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

நாட்டிலேயே முதல்முறையாக ஆற்காடு நகராட்சியில் கண்காணிப்பு கேமராக்களுடன் அதிநவீன குப்பைத்தொட்டி அமைக்கும் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஆற்காடு தொகுதியில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சொந்தச் செலவில் ரொக்கப் பரிசு வழங்கியும், மேல் படிப்புக்கும் உதவியுள்ளேன்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆற்காடு- புதிய வேலூர் சாலையை, பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சிலை வரை அகலப்படுத்தி சாலையின் மத்தியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 48 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன.

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஆற்காடு, புதுப்பாடி,திமிரி, கணியம்பாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிநவீன அட்ரா சோனாகிராம் (ஸ்கேன்) கருவி அமைக்கப்பட்டுள்ளது. வாழைப்பந்தல் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.

ஆற்காடு நகரில் நீண்ட காலமாக தூர் வரப்படாமல் இருந்த பொதுப்பணித் துறை கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஆற்காடு தொகுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் 85 சதவீதம் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆரணியிலிருந்து ஆற்காடு வரும் சாலையில் புறவழிசாலை அமைக்க ரூ. 1.46 கோடி மதிப்பீட்டில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து, புதிய சாலை அமைக்க கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய பத்திரப் பதிவு அலுவலகக் கட்டடம், வணிக வரி துணை அலுவலக கட்டடம் ஆகியவை ஆற்காட்டில் கட்டப்பட்டுள்ளன. மாணவர் விடுதிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நபார்டு திட்டத்தின் மூலம் ஆற்காடு தொகுதியில் ரூ. 26 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஆற்காடு தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து புறவழிச்சாலைக்கு புதிதாக 70 அடி சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com