வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மாதனூரில் காவல் நிலையம்;காத்திருக்கும் பொது மக்கள் !

மாதனூரில் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Updated On :28 மார்ச் 2016, 7:08 pm

மாதனூரில் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆம்பூர் காவல் உள்கோட்டத்தில் ஆம்பூர் நகரம், ஆம்பூர் கிராமியம், அனைத்து மகளிர், உமர்ஆபாத், வேப்பங்குப்பம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா ஆகிய காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மாதனூர், மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பிரச்னைக்காக ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்தை அணுக வேண்டியுள்ளது.

இந்தக் காவல் நிலையத்தின் எல்லை வாணியம்பாடியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருஷோத்தமகுப்பத்தில் தொடங்கி மாதனூரை அடுத்த பாலாண்டிப்பட்டி வரையிலும், ஒடுகத்தூர் மார்க்கத்தில் வளையல்காரபட்டி வரையும் உள்ளது. சுமார் 40 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள இந்த காவல் நிலைய எல்லையில் வசிக்கும் பெரும்பாலானோர் நீண்ட தொலைவு பயணம் செய்து ஆம்பூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கிராமியக் காவல் நிலையத்துக்கு வரவேண்டியுள்ளது.

மேலும், ஆம்பூர் கிராமியக்காவல் நிலையத்தின் பெரும்பாலான கிராமங்கள் 6 வழி தேசிய நெடுஞ்சாலை சாலையில் அமைந்துள்ளன. அதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்படும் முக்கியப் பகுதியாக மாதனூர் உள்ளது.

இரு சக்கர வாகனம், சாலையைக் நடந்து கடப்போர், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளைச் சந்திக்கும் நிலை உள்ளது. மேலும், மாதனூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், மேல்நிலைப் பள்ளி, வங்கிகள் செயல்படுவதால் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் மாதனூருக்கு தினசரி வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட மாதனூர் மையப்பகுதியாக விளங்குவதால், அங்கு காவல் நிலையம் அமைக்கப்படுவது அவசியமாகிறது.

அவ்வாறு காவல் நிலையம் அமைக்கப்பட்டால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கவும், உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவும் இயலும். மாதனூரில் காவல் நிலையம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக இதுகுறித்து கோரிக்கை மனுக்கள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே மாதனூரில் காவல் நிலையம் அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.