புது தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவத்தைக் கண்டித்து ராணிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வாலாஜாபேட்டை வட்டச் செயலாளர் எல்.சி.மணி கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.வெங்கடேசன், வட்டக் குழு உறுப்பினர்கள் குப்புசாமி, பத்மாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.