பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நீதிமன்ற கட்டுமானப் பணிகள் தொடக்கம்

அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 4.71 கோடியில் கட்டப்பட உள்ள இரு சார்பு நீதிமன்றக் கட்டடங்கள்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:21 pm

DIN

அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 4.71 கோடியில் கட்டப்பட உள்ள இரு சார்பு நீதிமன்றக் கட்டடங்கள், நீதிபதிகள் குடியிருப்பு கட்டுமானப் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அரக்கோணம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர்.ரவி தலைமை வகித்தார். செயலாளர் என்.தமிழ்மாறன் வரவேற்றார். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணியைத் தொடங்கி வைத்தார். விழாவில்
நில ஆர்ஜித வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி கே.அமுதா, அரக்கோணம் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி லாவண்யா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.தமிழ்செல்வி, அரசு வழக்குரைஞர்கள் வீரராகவன், லோகாபிராமன், தியாகராஜன், மத்திய அரசு வழக்குரைஞர் தனசேகர், மூத்த வழக்குரைஞர்கள் ரமணி, பாலதிருவேங்கடம், நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.