கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

திருமலைச்சேரி கோயில் சிலைகள் மாயமான வழக்கு: தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம்

வாலாஜாபேட்டையை அடுத்த திருமலைச்சேரி கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த

Updated On :22 அக்டோபர் 2018, 12:32 am

வாலாஜாபேட்டையை அடுத்த திருமலைச்சேரி கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த சோமநாதர் கோயிலில் இருந்த 12 யோகி தேவி சிலைகள், 30 கல் தூண்கள் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  
வாலாஜாபேட்டையை அடுத்த திருமலைச்சேரியில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மூன்றாம் கிருஷ்ணன் என்ற மன்னன் சோமநாதர் கோயிலைக் கட்டினார். 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைமையான இக்கோயிலில் இருந்த 12 யோகி தேவி சிலைகள், பைரவர், துவார பாலகர்கள் கற்சிலைகள், 30 பழைமையான கல் தூண்கள் கோபுரத்தில் இருந்த நந்தி சிலைகள் உள்ளிட்டவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கோயில் புனரமைப்புப் பணியின்போது, மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் ராயன்குட்டை, மேட்டுத் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், கடந்த 12-ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் புகார் அளித்தார். அவரது அறிவுறுத்தலின்படி, இப்புகார் மனு வேலூர் மாவட்ட எஸ்.பி. மற்றும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திலும் கடந்த 15-ஆம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
மேலும்  மாயமான சிலைகள், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதே நேரத்தில் சோமநாதர் கோயிலில் மாயமான நந்தி சிலைகள் சென்னையில் அண்மையில் ரன்வீர் ஷாவின் வீட்டில் சிக்கிய சிலைகளை ஒத்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே, மாயமான சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வருவதோடு, சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
இந்நிலையில், இந்த வழக்கை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் தரப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.