விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் சொட்டுநீர்ப் பாசனம், கோழிப்பண்ணைகள் குறித்து விவசாயிகளுக்கு சான்றிதழ்களுடன் கூடிய இலவசப் பயிற்சி வகுப்பு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது: விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு மாத கால இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், சொட்டுநீர்ப் பாசனம், கோழிப்பண்ணை குறித்த அனைத்து தொழில்நுட்ப விளக்கங்களும், வங்கிகளில் கடன் வழங்கும் வசதிகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இந்த ஒரு மாதகால பயிற்சி வகுப்புகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தப் பயிற்சிக்கான முன்பதிவு அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 4 மணி வரை நடைபெறும். முதலில் வரும் 20 பேருக்கு மட்டும் நேர்காணல் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி பங்கேற்க 8-ஆவது முதல்
10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பயிற்சியின்போது வருகைப்பதிவு இல்லாதவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது. முன்பதிவுக்கு ஆதார் எண் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

