ஜெயலலிதா ஏற்படுத்திய அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுகவுடன் தினகரன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி குற்றம் சாட்டினார்.
வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு சாமானியர்களாக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர். அத்தகைய சாமானியர்களின் ஆட்சியைக் கலைத்திட திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் செயல்பட்டு வருகிறார்.
அவர் தற்போது தகுதிநீக்கப்பட்ட 18 எம்எல்ஏ-க்களைக் கொண்டு மீண்டும் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்து வருகிறார். மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தால் ஆட்சியில் உள்ளவர்கள் சிறை செல்வர் என்றும் தினகரன் கூறி வருகிறார்.
அவரது 1991-ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்துக் கணக்கும், தற்போதைய சொத்துக் கணக்கும் வெளியானாலே யார் சிறைக்கு செல்வர் என்பது தெளிவாகிவிடும் என்றார் அவர்.
கூட்டத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.லோகநாதன், வேலூர் மேற்கு மாவட்டச் செயலர் நாகராஜன், முன்னாள் மாவட்டச் செயலர் மூர்த்தி, சோளிங்கர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெல் ச.கார்த்திகேயன், வாலாஜா ஒன்றியச் செயலாளர் எம்.சி.பூங்காவனம், ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எம்.சுகுமார், பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் பூண்டி எம்.பிராகஷ், வாலாஜா நகரச் செயலாளர் டபிள்யூ.ஜி.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Vijay-க்கு வாய்ப்பில்லை! திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்! - திருமா | VCK

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

