ஆம்பூர் பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டன.
ஆம்பூர் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு 290 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேலூரில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறைகளில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பிறகு அந்த அறைகள் பூட்டி "சீல்' வைக்கப்பட்டன. அந்த அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.