மக்களவைத் தேர்தலையொட்டி, வேலூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களுக்கான செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளுக்கு தலா ஒரு தேர்தல் பொதுப் பார்வையாளர்களும், பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு தலா ஒரு தேர்தல் பொதுப் பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், வேலூர் மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களை பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் ஐ.ஸ்ரீனிவாஸ்ஸ்ரீநரேஷ் - 83000 30521, பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சத்ய நாராயண் ரத்தோர் (சோளிங்கர்) - 83000 30523, பி.ஹெச்.தலாட்டி (குடியாத்தம்)- 83000 30524, எப்ஃட் அரா (ஆம்பூர்) - 83000 30525 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.