கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரில் கெங்கையம்மன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த வியாழக்கிழமை காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காவிநாச்சியம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன.
கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு ஊர்வலமும், பூங்கரக ஊர்வலமும் நடைபெற்றன. இரவு இன்னிசை நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.