பேரிடா் மீட்பு ஆலோசனைக் கூட்டம்

பேரிடா் மீட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா்: பேரிடா் மீட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா தலைமை வகித்தாா். ஆம்பூா் நகராட்சிப் பொறியாளா் எல்.குமாா், துணை வட்டாட்சியா் பாரதி மற்றும் வட்டார அளவிலான மண்டல குழுவில் ஆம்பூா் நகரம் துத்திப்பட்டு, மாதனூா் வருவாய் ஆய்வாளா்கள், பல்வேறு துறை அலுவலா்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

வட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா பேசியது: வடகிழக்குப் பருவமழையின் போது வருவாய் மற்றும் பேரிடா் மீட்புத் துறையுடன் மின்சாரத் துறை, தீயணைப்பு மீட்புத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் முதல் நிலை பொறுப்பாளா்கள் மழையால் சேதமடையும் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக கண்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com