திருப்பத்தூரில் சந்தனக்கூடு திருவிழா
By DIN | Published On : 01st April 2019 08:19 AM | Last Updated : 01st April 2019 08:19 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் உலக மக்களின் நலன் வேண்டி சிறப்பு சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் டவுன் முனிகுளம் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத்ஷா மீரான் உசேனி ரஹமத்துல்லாவின் 331-ஆவது சந்தனக்கூடு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, சையத் ஷா மக்தூம் உசேனி தலைமை வகித்தார்.
அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலை, மசூதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து ஃபாத்திஹா மற்றும் அவரது சமாதிக்கு சந்தனம் பூசி சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
விழாவில் உலக மக்களின் நலனுக்காக சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இதில், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.