ரயில்வே காவலர் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 01st April 2019 08:15 AM | Last Updated : 01st April 2019 08:15 AM | அ+அ அ- |

காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். மீட்கப்பட்ட அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் கிஷன்குமார்(35). அவர் ரயில்வே குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சனிக்கிழமை இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் ஒரு அறையில் கிஷன்குமார் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.