குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா
By DIN | Published On : 11th April 2019 07:26 AM | Last Updated : 11th April 2019 07:26 AM | அ+அ அ- |

குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழா பால் கம்பம் நடும் விழாவுடன் புதன்கிழமை தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா வரும் வைகாசி மாதம் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக புதன்கிழமை பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கோயில் நிர்வாக அதிகாரி இ.வடிவேல்துரை, தர்மகர்த்தா எம்.குப்புசாமி கவுண்டர், நாட்டாண்மை ஆர்.ஜி. சம்பத், முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.மோகன், ஜி. வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.