தேர்தல் பிரசாரம்.
By DIN | Published On : 11th April 2019 07:24 AM | Last Updated : 11th April 2019 07:24 AM | அ+அ அ- |

அதிமுக வேட்பாளர்...
வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாணியம்பாடியை அடுத்த உதேயந்திரம் பேரூராட்சி, மேட்டுப்பாளையம் சந்திப்பு, ஜாப்ராபாத், தேவஸ்தான், ஒடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் செய்தார்.
மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், பேரூராட்சி செயலர் பிச்சாண்டி, ஊராட்சிச் செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேர்ணாம்பட்டில்...
வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், ஆம்பூர் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஜெ. ஜோதிராமலிங்கராஜா ஆகியோர் மிட்டாளம், வெங்கடசமுத்திரம், பார்சனாப்பல்லி, கரும்பூர், வடக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் நகர அதிமுக சார்பில், வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து புதன்கிழமை வாக்கு சேகரிக்கப்பட்டது. நெல்லூர்பேட்டை, மாட்டுச் சந்தை திடல், பேர்ணாம்பட்டு சாலை, சிவகாமியம்மன் தெரு உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பெருமாள்நகர் ராஜன்,அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேல்விஷாரத்தில் பாமக வேட்பாளர்...
அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மேல்விஷாரம் நகரில் கத்தியவாடி சாலை, தஞ்சாவூரன் தெரு, கீழ்விஷாரம், ராமதாஸ் நகர், பிராசன் மேடு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் அ.முஹமதுஜான், முன்னாள் மாவட்டச் செயலர் ஏழுமலை, மேல்விஷாரம் அதிமுக நகரச் செயலர் ஏ.இப்ராஹீம்கலிலுல்லா, பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலர் எம்.கே.முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுக வேட்பாளர்...
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். கதிர்ஆனந்த் புதன்கிழமை குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பூசாரிவலசை, பரதராமி, நல்லாகவனியூர், கல்லப்பாடி, தாட்டிமானப்பல்லி, ராமாலை, பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார்.
திமுக ஒன்றியச் செயலர் கே. ரவி, அவைத் தலைவர் சேகர், கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலர் குமரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாதனூரில்...
ஆம்பூர் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் அ. செ.வில்வநாதன் மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம், சேலூர் ஆகிய ஊராட்சிகளில் மாதனூர் ஒன்றிய திமுக செயலர் ப.ச.சுரேஷ்குமார் தலைமையில் வாக்கு சேகரித்தார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், கூட்டுறவு வங்கி முன்னாள் செயலர் ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவிக்குமார், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.