தேர்தல் பிரசாரம்
By DIN | Published On : 12th April 2019 01:16 AM | Last Updated : 12th April 2019 01:16 AM | அ+அ அ- |

ஆம்பூரில் அதிமுக...
ஆம்பூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜோதிராமலிங்கராஜா ஆம்பூரில் இரட்டை இலை சின்னத்திற்கு வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.
ஆம்பூர் ஏ-கஸ்பா, பெரிய ஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஆம்பூர் நகர அதிமுக செயலாளர் எம். மதியழகன் தலைமையில் ஜோதிராமலிங்கராஜா இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கட்சி நிர்வாகிகள் அன்பரசன், தினேஷ், சீனிவாசன், பிரேம்குமார், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மூர்த்தி வியாழக்கிழமை பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.
பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள சாத்தம்பாக்கம், அயித்தம்பட்டு, கொம்மேஸ்வரம், அழிஞ்சிகுப்பம், தேவலாபுரம், பைரப்பல்லி, மாச்சம்பட்டு, ரெட்டிமாங்குப்பம், பெரிய கொம்மேஸ்வரம் உள்ளிட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.
அதிமுக பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலர் டி. பிரபாகரன், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, வெங்கடேசன், ஜெகதீசன், இன்பரசன், என்.இ.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மிட்டாளம் கிராமத்தில் திமுக...
பேர்ணாம்பட்டு ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் ஆம்பூர் இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் உதயசூரியன் சின்னத்திற்கு வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.
அவர் மிட்டாளம் ஊராட்சி, மிட்டாளம், பைரப்பள்ளி, குட்டக்கிந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆற்காட்டில் அமமுக...
அரக்கோணம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் ஆற்காடு காசி விஸ்வநாதர் கோயில் அருகில் தொடங்கி, கலவை சாலை, ஆரணி சாலை, அண்ணா சாலை, பேருந்து நிலையம், புதிய வேலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.
ஆற்காடு நகரச் செயலர் ஏ.ஐயப்பன், பொருளாளர் கருணாநிதி, அவைத் தலைவர் கோபி, வழக்குரைஞர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் அ.ஞானசேகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.
திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும். படித்த இளைஞர்களுக்காக தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரம் மற்றும் குடிநீர்ப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று பேசினார்.