திருமலையில் வார இறுதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து 

கோடை விடுமுறையை முன்னிட்டு இன்னும் மூன்று மாதங்களுக்கு வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான செயல்


கோடை விடுமுறையை முன்னிட்டு இன்னும் மூன்று மாதங்களுக்கு வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
தற்போது அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பின் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். எனவே வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 
விஐபி-க்கள் நேரில் வந்தால் மட்டுமே அவர்களுக்கு மேற்கூறிய நாள்களில் தரிசனம் வழங்கப்படும். இந்த நடைமுறை வரும் 19-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com