மழை வேண்டி மகாசண்டி யாகம்
By DIN | Published On : 04th August 2019 12:02 AM | Last Updated : 04th August 2019 12:02 AM | அ+அ அ- |

அரக்கோணம் பஜார், ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் மழைவேண்டி, சனிக்கிழமை மகா சண்டி யாகம் நடைபெற்றது.
அரக்கோணம் பஜாரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் மழைவேண்டி ஸ்ரீவாஞ்சா கலப லதா கணபதி ஹோமமும் அதன் மறுநாள் மகாசண்டி யாகமும் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட ஸ்ரீவாஞ்சா கல்ப லதா கணபதி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, சனிக்கிழமை காலை முதல் மகா சண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில் கோயில் திருப் பணிக் குழுத் தலைவர் கோபண்ணாரவி, உறுப்பினர்கள் வி.எம்.மணி, முனுசாமி, அரிகிருஷ்ணன், தாமு, வேணுகோபால் உள்ளிட்டோருடன் நகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
யாகத்தை ஸ்ரீதர்குருக்கள், பாபு குருக்கள், பரணி குருக்கள் ஆகியோர் நடத்தினர்.