தினமணி செய்தி எதிரொலி: திருப்பத்தூர் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 06th February 2019 05:38 AM | Last Updated : 06th February 2019 05:38 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அகற்றியது.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் உள்ளும், வெளிப்புறத்திலும் நகராட்சியின் அனுமதியற்ற ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக ஏற்பட்டு பயணிகள் பெரும் பாதிப்பை தொடர்ந்து சந்தித்து வந்தனர். பேருந்து நிலைய வளாகத்தினுள் தோன்றிய தற்காலிகக் கடைகளால் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்துவதற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதுகுறித்த செய்தி அண்மையில் தினமணியில் வெளியானது.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் இரா.சந்திரா உத்தரவின்பேரில் நகரமைப்பு ஆய்வாளர் லட்சுமிநாராயணன், துப்புரவு ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அத்துடன் இனி வருங்காலங்களில் நகராட்சி அனுமதியின்றி கடைகள் அமைத்தால் அபராதமும், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...