எல்லையம்மனுக்கு பூங்கரக ஊர்வலம்
By DIN | Published On : 12th February 2019 04:59 AM | Last Updated : 12th February 2019 04:59 AM | அ+அ அ- |

குடியாத்தம் புதுப்பேட்டை, காங்கிரஸ் அவுஸ் சாலையில் கோயில் கொண்டுள்ள எல்லையம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி படவேட்டு எல்லையம்மன் கோயில், காளியம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து செதுக்கரையிலிருந்து பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து எல்லையம்மனுக்கு கூழ்வார்த்தல், கும்பம் படைத்தல், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கம்பன் கழகத் தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலர் கே.எம்.பூபதி, படவேட்டு எல்லையம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் லவர் வி.என்.தனஞ்செயன், விழாக்குழு நிர்வாகிகள் ஆர்.எஸ். சண்முகம், வி.ஏ.கே. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.