ஒரே நாளில் இரு சிறுமிகளின் திருமணம் நிறுத்தம்
By DIN | Published On : 12th February 2019 05:05 AM | Last Updated : 12th February 2019 05:05 AM | அ+அ அ- |

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் இரு சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
காட்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யப்பட இருந்தது. இதில், அச்சிறுமிக்கு திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாததால், வெள்ளிக்கிழமை அவசர உதவி எண் 1098-க்கு தகவல் தெரிவித்தார். சமூக நலத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்று திருமணத்தை சட்டரீதியாக தடுத்து நிறுத்தியதுடன், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சோளிங்கரைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத அம்மாணவி, 1098-க்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், சமூக நலத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்று திருமணத்தை சட்டரீதியாக தடுத்து நிறுத்தம் நடவடிக்கையை எடுத்தனர். அத்துடன் சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.