ஆம்பூர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு
By DIN | Published On : 04th January 2019 02:05 AM | Last Updated : 04th January 2019 02:05 AM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே குடியிருப்புப் பகுதியில் மலைப்பாம்பு புதன்கிழமை பிடிபட்டது.
ஆம்பூர் பாப்பனப்பல்லி கிராமத்தில் சதீஷின் மாட்டுக் கொட்டகை அருகில் சுமார் 8 அடி நீள மலைப் பாம்பு ஊர்ந்து சென்றது.
கிராம இளைஞர்கள் மலைப் பாம்பைப் பிடித்தனர். இதுகுறித்து ஆம்பூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல்
தெரிவித்தனர்.
அதன்பேரில் வனக்காப்பாளர்கள் செந்தில், பெருமாள் ஆகியோர் பாப்பனப்பல்லி கிராமத்துக்கு சென்று அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த மலைப்பாம்பை வெள்ளக்கல் காப்புக்காட்டில் விடுவித்தனர்.