பொதுமக்களுக்கு துணிப் பை வழங்கிய தையல் கலைஞர்கள்
By DIN | Published On : 04th January 2019 02:09 AM | Last Updated : 04th January 2019 02:09 AM | அ+அ அ- |

வாணியம்பாடி தையல் கலைஞர்கள் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பையை புதன்கிழமை இலவசமாக வழங்கினர்.
தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் வாணியம்பாடி நகரக் கிளை சார்பில் "பிளாஸ்டிக் பைகளைப் புறக்கணித்து துணிப் பை உபயோகிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. நகரத் தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் பெருமாள், மாநில பிரதிநிதி ராஜா, நிர்வாகிகள் கஜேந்திரன், வேலாயுதம், பழனி, முருகேசன், புருஷோத்தமன் மற்றும் திரளான தையல் கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக துணிப் பைகளை வழங்கினர்.