அரக்கோணத்தில் முருகனடியார் சங்க 42-ஆம் ஆண்டு விழா
By DIN | Published On : 07th January 2019 01:20 AM | Last Updated : 07th January 2019 01:20 AM | அ+அ அ- |

அரக்கோணத்தில் முருகனடியார் சங்கத்தின் 42-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
தர்மராஜா கோயில் திடலில் நடைபெற்ற விழாவில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், 7.30 மணிக்கு 108 அர்ச்சனை, 9 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை எஸ்.ஆர்.கேட்டில் இருந்து முருகர் வீதி உலா நடைபெற்றது. இதில், பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
தொடர்ந்து பழனிபேட்டை, பஜார், பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை வழியாகச் சென்ற வீதியுலா தர்மராஜா கோயில் திடலை அடைந்தது. அங்கு முருகன் அவதாரம் குறித்து சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.